என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » காயம் அடைந்த பாம்பு
நீங்கள் தேடியது "காயம் அடைந்த பாம்பு"
மும்பை பகுதியில் உடலில் காயம் அடைந்து ஊர்ந்து செல்ல முடியாமல் இருந்த பாம்புக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கப்பட்டு, கோல்டு லேசர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. #Snake #MRI #Scan
மும்பை:
மும்பை தகிசர் பகுதியில் நேற்று முன்தினம் போலீஸ்காரர் ஒருவர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, அங்கு விஷப்பாம்பு ஒன்று உடலில் காயம் அடைந்து ஊர்ந்து செல்ல முடியாமல் நெளிந்துகொண்டு இருந்தது. இதை பார்த்ததும் போலீஸ்காரர் அந்த பாம்பை மீட்டு பாம்பு பிடிக்கும் அனில் குபால் என்பவரிடம் ஒப்படைத்தார்.
அவர் செம்பூரை சேர்ந்த கால்நடை டாக்டர்களிடம் சிகிச்சைக்காக அந்த பாம்பை கொண்டு வந்தார். பரிசோதனையில் அந்த பாம்பின் முதுகெலும்பு உடைந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதற்கு சிகிச்சை அளிப்பதற்கு முதுகெலும்பு எந்த அளவுக்கு சேதம் அடைந்து உள்ளது என்பதை கண்டறிய அந்த பாம்புக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கப்பட்டது.
அந்த பாம்புக்கு ‘கோல்டு லேசர்’ சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும், குழாய் மூலம் அதற்கு உணவு வழங்கப்படுவதாகவும், முற்றிலும் குணமடைந்ததும் அந்த பாம்பு காட்டில் விடப்படும் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். #Snake #MRI #Scan

×

X